மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி
1 min read
State level DMK MM Abdullah contest as a candidate
22/8/2021
மாநிலங்களவை திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
எம்.எம்.அப்துல்லா
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அக்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது திமுகவின் வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணைச் செயலாளராக எம்.எம் அப்துல்லா பதவி வகித்து வருகிறார்.