அசாமில் லாரிகள் தீ வைப்பு; 5 பேர் உயிரிழப்பு
1 min read
Lorries set on fire in Assam; 5 fatalities
27.8.2021
அசாமில் 7 லாரிகள் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தீ வைப்பு
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளன.
அவற்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் திடீரென தீ வைத்து உள்ளனர். இந்த சம்பவத்தில் தீ அடுத்தடுத்து பரவியதில் 7 லாரிகள் எரிந்து போயுள்ளன. இந்த தீ வைப்பு சம்பவத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.