‘வாழ்க்கைத் துணை தேவை’ என டீ கடையில் போர்டு வைத்த இளைஞருக்கு வந்த வெளிநாடு வரன்கள்
1 min readForeign grooms who came to the young man who put up a board in the tea shop as ‘need a life partner’
1.9.2021
‘வாழ்க்கைத் துணை தேவை’ என டீ கடையில் போர்டு வைத்த இளைஞருக்கு இங்கிலாந்து உள்பட வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள்
குவிகிறது.
டீக்கடையில் போர்டு
கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம் வல்லசிரா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். 33 வயதாகும் இவர், தன் திருமணத்திற்கு பெண் பார்க்க எந்த தரகர்களையும் நாடவில்லை. தனது சிறிய தேநீர் கடையின் முகப்பில், ஒரு அட்டையை தொங்கவிட்டுள்ளார்.
அதில், ‘வேலைக்கு ஆள்கள் தேவை, கடை வாடகைக்கு உள்ளது’ என்பது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை. மாறாக, ‘வாழ்க்கைத் துணை தேவை. ஜாதி, மதம் கட்டாயமில்லை’ என, எழுதி அதில் அவரது மொபைல்போன் எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.
பேட்டி
இந்த படத்தை அவரது நண்பர்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர செய்துள்ளார். இதுகுறித்து உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:-
நான் என் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடையும், தேனீர் கடையும் நடத்தி வருகிறேன். தற்போது திருமணம் செய்ய விரும்புகிறேன். தரகர்களையோ, திருமண தகவல் மையங்களையே நாட எனக்கு விரும்பவில்லை. எனக்காக எனது நண்பர்களும் அவரது குடும்பத்தினரும் மணப்பெண்ணைத் தேடி வருகிறார்கள். ஆனால் எங்கும் அமையவில்லை.
வெளிநாடுகளில் இருந்து…
இதனால்தான் இப்படி ஒரு விளம்பரத்தை செய்ய முடிவு செய்தேன். விளம்பரத்தைப் பார்த்து மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளி நாடுகளில் இருந்து எல்லாம் எனக்கு திருமண விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லக் கூட நேரமில்லாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.