இந்தியாவில் மேலும் 38,948 பேருக்கு கொரோனா; 219 பேர் சாவு
1 min read
Corona for another 38,948 in India; 219 deaths
6.9.2021
இந்தியாவில் மேலும் 38,948 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 38,948 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 43,903 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.04 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
219 பேர் பலி
நேற்று 219 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதை அடுத்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,40,752 ஆக உயர்ந்தது.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.44 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.23 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (செப்டம்பர் 6) காலை 8 மணி நிலவரப்படி 68.75 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 25,23,089 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலக அளவில்…
இன்று (செப்டம்பர் 6-ம் தேதி) காலை 11 மணி நிலவரப்படி உலகில் அளவில் கொரோனாவால் தொற்றால் 22 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரத்து 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 81 ஆயிரத்து 955 பேர் பலியாகினர். 19 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரத்து 416 பேர் மீண்டனர்.