June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

போலி தடுப்பூசி நடமாட்டம்; மத்திய அரசு எச்சரிக்கை

1 min read

Pseudo-vaccine immunization; Federal warning

6/9/2021

இந்தியாவில் போலியான கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நிலையில், உண்மையான தடுப்பூசிகளை அடையாளம் காண்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து, ஒன்றிய அரசு கடிதம் எழுதிஉள்ளது.

3 வகையான தடுப்பூசி

தற்போது நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ‘சீரம்’ நிறுவனத்தின் கோவிஷீல்டு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் – வி’ ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வினியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

நம் நாட்டிலும் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எச்சரிக்கை

இது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.’நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’ என, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள ‘லேபிள்’ எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *