நிபா வைரஸ் நோய் பரவுவது எப்படி?
1 min read
How is the Nipah virus transmitted?
6/9/2021
நிபா வைரஸ் நோய் பரவுவது எப்படி? என்றும் அதற்கான அறிகுறிகள் பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ்
கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.
கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிபா வைரசுக்கு 12 வயது சிறுவன் ஒருவர் பலியானார்.
நிபா வைரஸ் காற்று மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை வவ்வால் மூலமும், மிருகங்கள் வாயிலாகவும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பறவைகள் கடித்துபோட்ட பழங்களை உண்ண வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் எச்சரித்து உள்ளனர்.
அறிகுறிகள்
நோய் அறிகுறியாக கூறப்படுவதாவது:-
- நிபா வைரஸ் முதலில் லேசான தலைவலியுடன் ஆரம்பமாகும்.
- தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.
- தொடர்ந்து வாந்தி வருவது போல இருக்கும்.
- வாந்தியுடன் லேசான மயக்கமும் ஏற்படும்.
- மயக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.
- நாள் முழுக்க உடல் சோர்வுடன் மயக்கமாகவே காணப்படும்.
7.தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
- நோயின் தீவிரம் குறையாமல் தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.