இந்தியாவில் புதிதாக 31,222 பேருக்கு தொற்று; 290 பேர் உயிரிழப்பு
1 min read
31,222 new infections in India; 290 casualties
792021
இந்தியாவில் மேலும் கொரோனா பாதிப்பு குறைந்தது. இன்று காலை புதிதாக 31,222 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 290 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியநிலையில், நேற்று முதல் சற்று குறைய தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக இந்தியய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 222 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 19,688 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக அதிகரித்துள்ளது.
290 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,042 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,942 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.42 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,92,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,13,53,571 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.