இந்தியாவில் மேலும் 27,254 பேருக்கு கொரோனா; 219 பேர் சாவு
1 min read
Corona for another 27,254 in India; 219 deaths
13.9.2021
இந்தியாவில் ஒரு நாளில் மேலும் 27,254பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. 219 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24
மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 37,687- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 269 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42
ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது.