அடுத்த மாதம் முதல் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும்
1 min read
The first vaccine shipments will begin next month
20.9.2021
இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனுசுக் மாண்ட்வியா கூறியதாவது;-
100 கோடி தடுப்பூசி
அக்டோபர் மாதத்தில் 30 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் அரசுக்கு கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை தாண்டிவிட்டது.
கடந்த 11 நாட்களில் மட்டும் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்றுமதி
எனினும், உபரியாக உள்ள தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் பணி அடுத்த காலாண்டில் (அக்-நவம்பர்) தொடங்கும். தடுப்பூசி மைத்ரி மற்றும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பட்டை நிறைவேற்றும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.