இந்தியாவில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா; 277 சாவு
1 min readCorona for a further 26,727 in India; 277 Death
1.10.2021
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 26,727 பேராக அதிகரித்துள்ளது. 277 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 20 ஆயிரத்துக்குள் அடங்கியது. ஆனால் நேற்று பரவல் திடீரென அதிகரித்து, தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.
இன்று காலை காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 23 ஆயிரத்து 529 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வரை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 28,246 பேர் குணம் அடைந்துள்ளனர்.
277 பேர் சாவு
கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 224 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,30,43,144 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது.