மனைவியை ரூ.500க்கு விற்ற வாலிபர் கைது
1 min readMan arrested for selling wife for Rs.500
4.10.2021
குஜராத்தில் தன் மனைவியை ரூ.500க்கு வேறொரு நபரிடம் விற்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
மனைவி விற்பனை
பணம் தேவைப்படும் நேரத்தில் நகை, பொருட்களை அடமானம் வைப்பதையோ, விற்பதையோ கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவர் ரூ.500க்கு தன் மனைவியையே விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறியதாவது:-
எங்களிடம் இளம்பெண் ஒருவர் புகாரளிக்க வந்தார். அதில், செப்டம்பர் மாதம் 30-ந் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.
அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் ரூ.500ஐ பெற்றுக்கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக சொல்லியுள்ளார். மறைவான பகுதிக்கு கூட்டிச்சென்ற சோனு சர்மா அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
கைது
இந்த புகாரையடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.