நீட் தேர்வை ரத்து செய்யகோரிய மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
1 min read
Petitioner seeking cancellation of NEET examination will be charged Rs. 5 lakh fine
4.10.2021
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யகோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நீட் தேர்வு
2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதிகள், வெறும் 5 எஃப்.ஐ.ஆர். பதிவுகளை மட்டும் வைத்து 7.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள தேர்வினை ரத்து செய்யப்பட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மனுவுக்கு தங்களின் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர்.
ரத்து
பின்னர் அபராதத் தொகையை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதால், அதை ஏற்றுக்கொண்டு அபராதத்தை மட்டும் ரத்து செய்து நீதிபதிகள் அறிவித்தனர்.