அருணாசல பிரதேச மாநில எல்லைப் பகுதியில் சீனா அத்துமீற முயற்சி
1 min read
Attempt by China to encroach on Arunachal Pradesh state border
8.10.2021
அருணாசல பிரதேச மாநில எல்லைப் பகுதியில் சீனா அத்துமீற முயன்சி செய்தது. ஆனால் அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
சீனா ஊடுருவர்
இந்திய- சீன எல்லைப் பகுதியில் சுமார் 3,500 கி.மீட்டர் நீளம் கொண்டது. இந்த எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வதும், இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்துவதுமான சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
லடாக்கில் இதுபோன்ற சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழையும்போது, இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது கடும் மோதல் ஏற்பட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அதன்பின் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அதன்படி பெரும்பாலான இடங்களில் சீன ராணுவம் பின் வாங்கியது.
சிறிது காலம் அத்துமீறல் ஏதும் இல்லாத நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின.
அத்துமீறல்
இந்நிலையில் அருணாச்சால மாநில எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறியதாகவும், இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் கருத்தில் வேறுபாடு உள்ளதாக உணரப்படுகிறது. மேலும் இரு தரப்பினரும் தங்களுடைய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் அவர்களுடைய பழைய இடத்திற்கு செல்லும்முன் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் சீனாவின் ஊடுருவல் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
100 சீன வீரர்கள்
கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி சுமார் 100 சீன வீரர்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி 5 கி.மீட்டர் தூரத்திற்கு பாரஹோட்டி பகுதியில் வந்ததாகவும், இந்தோ-திபெத் எல்லை போலீசார் அந்த இடத்திற்கு வந்தபின் சீன வீரர்கள் அவர்களுடைய இடததிற்கு திரும்பியுள்ளனர்.
இந்திய- சீன எல்லையில் இருநாடுகளும் தலா 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வீரர்களை முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.