மின்சாரம், நிலக்கரித்துறை மந்திரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை
1 min read
Amitsha urgent consultation with power and coal ministers
11.10.2021
மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரிகளுடன் ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
நிலக்கரி தட்டுப்பாடு
நாட்டின் மின்சார தேவையில் சுமார் 70 சதவீதத்தை, இந்தியாவில் உள்ள 135 அனல் மின் உற்பத்தி நிலையங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி ஆதாரமாக உள்ளது. இதற்கிடையில், நாட்டில் மின் தேவை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தையை அதிகரிக்க நிலக்கரிக்கான தேவை பெருகி வருகிறது.
சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால், நிலக்கரிக்கு உள்நாட்டு உற்பத்தியை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தியாவில் நிலக்கரி தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அவசர ஆலோசனை
இந்த நிலையில், ஒன்றிய மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே. சிங் மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பரல்ஹட் ஜோஷியுடன் ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி கையிருப்பு, மின்சார தேவை மற்றும் உற்பத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மந்திரிகளுடன் தேசிய அனல்மின் கழக அதிகாரிகள் உள்பட பல்வேறுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.