தமிழகத்தில் இன்று 1,329 பேர் கொரோனா; 15 பேர் சாவு
1 min read
In Tamil Nadu today 1,329 people are corona; 15 deaths
10.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,344 -ல் இருந்து 1,329 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,436 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,40,091 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,329 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,84,63,913 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 763 பேர் ஆண்கள், 566 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,436 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,26,352 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். திருவாரூரில் 3 பேரும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், சேலம், தஞ்சை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், மதுரை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று இறந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,783 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக இருந்த நிலையில் இன்று 171 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் சென்னையில் இன்று உயிரிழப்பு இல்லை.
கோவையில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 99 பேருக்கும், ஈரோட்டில் 78 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 12 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.