லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பிரியங்கா காந்தி பங்கேற்பு
1 min read
Priyanka Gandhi attends funeral of farmers killed in Lakhimpur violence
12.10.2021
லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
விவசாயிகள் பலி
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரியங்கா
இந்நிலையில், லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்றார். சீக்கியர்கள் நடத்திய பிரார்த்தனையில் பிரியங்கா காந்தி பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.