June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரு நாளில் 15,981 பேருக்கு கொரோனா; 166 பேர் சாவு

1 min read

Corona to 15,981 people a day in India; 166 deaths

16/10/2021

இந்தியாவில் நேற்று 16 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 15,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 17,861 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 573- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 1 ஆயிரத்து 632- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 99 ஆயிரத்து 961- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 23 லட்சத்து 77 ஆயிரத்து 045- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 118- பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.