குஜராத்தில் இருந்து ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் தீ விபத்து
1 min read
Fire breaks out on oil tanker en route from Gujarat to Oman
30.6.2025
குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், இந்திய கடற்படை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. இந்திய கடற்படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலாவு நாட்டு கொடியுடன் சென்ற அந்த கப்பலில் என்ஜின் அறையில் தீ பிடித்ததால் கப்பல் முழுவதும் மின்சாரம் தடை பட்டுள்ளது. உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.