அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசு வெடிக்க தடை
1 min read
Fireworks banned in 14 districts in Haryana
சண்டிகர், நவ.1-
அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநில 14 மாவட்டங்களில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக்,பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
ஆன்லைன் மூலமும் விற்பனைக்கும் அனுமதியில்லை. திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டு உள்ளதாகவும், காற்றின் தரம் சற்று மேம்பட்ட நகரங்களில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.