இந்தியாவில் மேலும் 12,514 பேருக்கு கொரோனா; 251 பேர் சாவு
1 min read
Corona for another 12,514 in India; 251 deaths
1/11/2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒரே நாளில் 12,514 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.74 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 14,313 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று 12,830 ஆக குறைந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 12,514 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
251 பேர் சாவு
மேலும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,58,186 லிருந்து 4,58,437 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாளில் 12,718 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,55,842 லிருந்து 3,36,68,560 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20 சதவீதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாககவும் உள்ளது.