இந்தியாவில் மேலும் 11,451 பேருக்கு கொரோனா; 266 பேர் சாவு
1 min read
Corona for another 11,451 people in India; 266 deaths
8.11.2021
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 11 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 266 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 10 ஆயிரத்து 853-ஐ விட சற்று அதிகமாகும்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13 ஆயிரத்து 204 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
266 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 61 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 23 லட்சத்து 84 ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 108 கோடியே 47 லட்சத்து 23 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.