பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி-மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min read
Immediate relief fund for crop damage-MK Stalin’s interview
13.11.2021
பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த சூழலிலும் திமுக அரசு விவசாயிகளை கண் போல காக்கும். பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இயன்ற அளவிற்கு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பயிர் சேதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.
4 மாதங்களில் திமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சிலர் மழை வெள்ள பாதிப்புகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். 2015ல் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதைப்போல் அல்லாமல் முன்கூட்டியே உபரி நீரை வெளியேற்றினோம். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க நிரந்தர தீர்வை நோக்கி திமுக அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.