கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
1 min read
Red Alert alert for 3 districts in Kerala
14/11/2021
கேரளாவில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரெட் அலட்
கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் ஆகிய 3-மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளாவின் மத்திய பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.
தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.