இந்தியாவில் புதிதாக 10,488 பேருக்கு கொரோனா; 313 பேர் சாவு
1 min read
Corona for 10,488 newcomers in India; 313 deaths
21/11/2021
இந்தியாவில் புதிதாக 10,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரே நாளில் 313 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,329 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 313 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,45,10,413 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 714 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,39,22,037 – ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,65,662 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 6.27.277 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,16,50,55,210 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.