இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,579 ஆக குறைந்தது; 236 பேர் சாவு
1 min read
Daily corona exposure in India drops to 7,579; 236 deaths
23.11.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,579 பேராக குறைந்தது. ஒரு நாளில் 236 பேர் உயிரிந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 8 ஆயிரத்து 488- ஐ விட சற்று குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12 ஆயிரத்து 202 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 34 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
236 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.