June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கத்ரினா கைப் கன்னம் போல் சாலைகள் இருக்க வேண்டும்; ராஜஸ்தான் மந்திரி பேச்சால் சர்ச்சை

1 min read

Roads should be like Katrina’s chin; Controversy over Rajasthan minister’s speech

24/11/2021

சாலைகள் பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பின் கன்னம்போல் இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கன்னம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் பீகாரில் பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல மிருதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

அதேபோல், மத்தய பிரதேசத்தில் கடந்த 2019ல் அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா, ‘ஹேமமாலினி கன்னங்கள் போன்று சாலைகள் அழகாக்கப்படும்’ எனக் கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் காங்., அமைச்சரும் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மந்திரி

ராஜஸ்தானில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு பலருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ராஜேந்திர சிங் குத்தாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிகாரிகளிடம் சாலைகள் ஹேமமாலினி கன்னங்கள் போல மிருதுவாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
பிறகு, அங்கிருந்த மக்களிடம், ‘இப்போது எந்த நடிகை பிரபலமாக உள்ளார்,’ எனக் கேட்கிறார். அதற்கு கூட்டத்தினர் கத்ரினா கைப் என்றதும், ‘கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல இப்பகுதியில் சாலை அமைக்கப்பட வேண்டும்,’ எனக் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு இப்போது வைரலாகியுள்ளது. மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *