டிசம்பர் மாதத்திற்காக திருப்பதியில் 3 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2021/08/திருப்பதி.jpg)
3 lakh free darshan tickets released in Tirupati for the month of December
28.11.2021
டிசம்பர் மாதம் ஏழுமலையானை வழிபடுவதற்காக வெளியிடப்பட்ட 3,10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை 16 நிமிடத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.
இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்களுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் நேற்று முன்தினம் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.