இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 21 ஆக உயர்வு
1 min read
Omegron exposure rises to 21 in India
5.12.2021
இந்தியாவில் ஒமைக்கான் பாதிப்பு 21 ஆக உயர்வு
5.12.2021
இந்தியாவில் ஒமைக்கான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்கான்
உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்படும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்று காரணமாக இது வரையில் சுமார் 160 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடரந்து வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருவபர்கள் கண்காணிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஒமைக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வோடு கண்காணிக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. இந்தியவை பொறுத்தவரையில் கர்நாடகம், குஜராத் டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இதுவரையில் சுமார் 8 பேருக்கு ஒமைக்ரான்தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.இதனையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.