June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6,822 பேராக குறைந்தது; 220 பேர் சாவு

1 min read

Daily corona exposure in India drops to 6,822; 220 deaths

7.12.2021
558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 822 பேராக குறைந்துள்ளது. 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது.
அதன்படி, இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.

இன்ற காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 004 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

220 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 79,39,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,76,10,590 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.