ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மதுரை டாக்டர் சஸ்பெண்டு
1 min read
Sexual harassment of the woman who came to take the scan: Madurai Dr. Suspend
7.12.2021
ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகார்: மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஸ்கேன் எடுக்க வந்த பெண்
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஸ்கேன் பரிசோதனை மையத்திற்கு 26 வயது இளம்பெண் ஒருவர் ஸ்கேன் எடுக்க வந்தார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த ரேடியோலஜி டாக்டர் சக்கரவர்த்தி, ஸ்கேன் செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மறுநாள் மீண்டும் பரிசோதனைக்காக வந்த போது அந்த பெண்ணுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
தனது புகாரை அந்த இளம்பெண், அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் மற்றும் ரேடியோலஜி துறை தலைவரிடம் அளித்திருந்தார்.
புகார் அளித்த பெண்ணிடமும், சம்பந்தப்பட்ட அரசு டாக்டரிடமும் விசாரணை நடத்திய விசாரணை குழுவினர், தங்களது அறிக்கையை, சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சஸ்பெண்டு
இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ரேடிேயாலஜி டாக்டர் சக்கரவர்த்தி நேற்று பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறிய போது, “கடந்த 24 வருடங்களாக அரசுப் பணியில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு ஸ்கேன் செய்திருக்கிறேன். இதுவரை என்மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. பழிவாங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த புகார் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு விசாரணையும் இன்றி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தை எதிர்த்து போராடியதன் விளைவாகவே என் மீது இந்த அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள்,” என்றார்.