முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை கவலை
1 min read
The habit of wearing a mask has greatly diminished: health concerns
10.12.2021
இந்தியர்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
முகக்கவசம்
இந்தியாவில் தற்போது 25 ஓமிக்ரோன் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை ஒன்றிய செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில் தற்போது இந்தியாவில் முகக் கவசம் அணியும் பழக்கம் குடிமக்களிடம் இருந்து வெகுவாக குறைந்து வருகிறது.உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து தொடர்ந்த எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது. தடுப்பு மருந்து செலுத்துதல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய இரண்டும் மிகவும் அவசியமானது.
தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 0.73 சதவீதம் மக்கள் மட்டுமே வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 14 நாட்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் நோயாளிகள் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரளா, மஹா., ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு லவ் அகர்வால் தகவல் அளித்துள்ளார்.