June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 627 பேருக்கு கொரோனா;12 பேர் சாவு

1 min read

Corona for 627 people in Tamil Nadu today; 12 deaths

16.12.2021
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 640 ல் இருந்து 627ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 687 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,04,531 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,37,962 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 365 பேர் ஆண்கள், 262 பேர் பெண்கள். இன்று 687 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,93,830 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தி்ல் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,656 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக இருந்த நிலையில் இன்று 124 ஆக சற்று குறைந்துள்ளது.

கோவையில் 104 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும், நெல்லையில் 7 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.