பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது
1 min read
Bhutan’s highest award to Prime Minister Modi
17.12.2021
பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பூடான் விருது
பூடான் நாட்டின் 114-வது தேசிய நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ என்கிற உயரிய விருதை அளிப்பதாக பூடான் அரசு அறிவித்திருக்கிறது. இதைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங், மோடியின் பெயர் விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பூடான் பிரதமர் லோடே ஷேரிங் கூறியதாவது:-
பிரதமர் மோடி இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர். பூடான் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். உன்னதமான, ஆன்மிக மனிதனாக மோடி பார்க்கப்படுகிறார். கொரோனா தொற்றுகளின்போதும் மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.