August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாயத்தை பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளர்; மோடி பெருமிதம்

1 min read

Thiruvalluvar said about agriculture 2 thousand years ago; Modi is proud

16.12.2021

குஜராத்தில் நடைபெற்று வரும் வேளாண் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர், திருக்குறளை குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார் என்றார்.

குஜராத்தில் நடக்கும் தேசிய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

திருவள்ளுவர்

சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, வேளாண்மையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். குஜராத் அரசின் வேளாண் திட்டங்கள் நாட்டிற்கே வழிகாட்டுகின்றன. தமிழ்நாட்டின் திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மண் வளம் பாதுகாப்பு பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விவசாயம்

விவசாயத்தை வேதியியல் ஆய்வகத்தில் இருந்து அகற்றி, இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டும். இயற்கை ஆய்வகம் குறித்து பேசும் போது, அது முற்றிலும் அறிவியல் சாய்ந்தது. விதை முதல் மண் வரை, அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வானது இயற்கை முறையில் கிடைக்க செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கை விவசாயம் மூலம் மட்டுமே அதிக பயிர்களை நடவு செய்ய முடியும். அடிப்படைக்கு திரும்புவோம் என்ற கொள்கையை உலக நாடுகள் பின்பற்ற துவங்கி உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் வருமானம் பெருகும். நமது உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

சிறு விவசாயங்கள்

இயற்கை விவசாயம், நாட்டில் உள்ள 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். சிறு விவசாயிகள் அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர்.. ஆனால், இயற்கை உரத்தை பயன்படுத்தினால், அவர்களுக்கு பலன் கிடைக்கும்.

விவசாய தொழில்நுட்பங்களில் தவறுகளை அகற்ற வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதால், நிலத்தின் உற்பத்தி திறன் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், வேளாண் கழிவுகளை எரிப்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *