ஒமைக்ரான் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு; மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Nighttime curfew in areas where omegranes are highly detectable; Federal Government Instruction
23.12.2021
தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஒமைக்ரான்
முதன்முதலாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலம் – 65, டெல்லி – 64, தமிழ்நாடு -34, தெலுங்கானா – 24, ராஜஸ்தான் – 21, கர்நாடகா – 19, கேரளா – 15, குஜராத் – 14, ஜம்மு-காஷ்மீர் – 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் – 2, ஆந்திரா – 2, சண்டிகர் – 1, லடாக் – 1, மேற்கு வங்காளம் – 1, உத்தரகாண்ட் – 1, ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரவு நேர ஊடங்கு
இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறும் போது தொற்று உள்ளோரின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.