June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

1 min read

Singer Manika Vinayagam passed away due to ill health

26/12/2021

பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.

பின்னணி பாடகர்

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

திருடா திருடி திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தில், யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *