June 18, 2025

Seithi Saral

Tamil News Channel

தாயை காப்பாற்ற 70 வயது முதியவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சிறுமிகள்

1 min read

Girls who killed a 70-year-old man with an ax to save their mother

29.12.2021
தாயை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை சிறுமிகள் கோடாரியால் வெட்டிக் கொலை செய்தனர்.

வேலைக்கு வந்த பெண்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது (70). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக நடமாட முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி முதல் மனைவியை கவனித்துக் கொள்ள நிலம்பூர் என்ற இடத்திலிருந்து ஒரு பெண்மணியை, முகமது தனது வீட்டுவேலைக்கு அழைத்து வந்தார்.

வேலைக்கு வந்த பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் மகள்கள் உள்ளனர். அவர்களும் அந்த வேலைக்கார பெண்மணியுடன் தங்கியிருந்தனர்.

கற்பழிக்க முயற்சி

சம்பவத்தன்று இரண்டாவது மனைவி தற்செயலாக வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்போது காலை 10 மணி அளவில், முகமது வேலைக்கு சேர்ந்த பெண்மணியை கற்பழிக்க முயன்றார். இதை அறிந்த அவரது இரு மகள்களும் தடுக்க முயன்றனர். இதில் கோபம் அடைந்த முகமது, சிறுமிகளை அடித்து துன்புறுத்தினார்.

கொன்றார்கள்

மீண்டும் தங்களது தாயை கற்பழிக்க முயன்ற போது, அங்கே இருந்த ஒரு கோடாரியை எடுத்து இரு சிறுமிகளும் முகமதுவின் தலையில் ஓங்கி 2 முறை அடித்தனர். இதில் முகமது ரத்தம் வெள்ளத்தில் மயக்கமடைந்தார்.

தொடர்ந்து முகமதுவின் வலது காலை சிறுமிகள் கோடாரியால் வெட்டி துண்டாக்கினார்கள். முகமது இறந்ததை அறிந்து தாய் மற்றும் சிறுமிகள் மூவரும் சேர்ந்து, ஒரு சாக்குமூட்டையில் முகமது உடலை கட்டி ஒரு குழியில் போட்டு மறைத்து வைத்தனர்.

பின்பு சிறுமிகள் சுல்தான் பத்தேரி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாயை கைது செய்து முகமது உடலை மீட்டு சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு 2 சிறுமிகளையும் போலீசார் அங்குள்ள குழந்தைகள் காப்பக மையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் இன்று காலை வீடு திரும்பிய முகமதுவின் 2-வது மனைவி, இரு சிறுமிகளும் இந்த கொலைகளை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கொலை நடப்பதற்கு எனது உறவினர்கள் காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன் என்று போலீசாரிடம் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் இரு பெண்களும் நாங்கள் தான் கொலை செய்தோம் என்று ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாவது மனைவியோ, உறவினர்கள் தான் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளது போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.