அதிகரிக்கும் கொரோனாவால் டெல்லியில் கோவில்கள் மூடப்பட்டன
1 min read
Temples in Delhi were closed due to rising corona
30.12.2021
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
ஒமைக்ரான்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமையை விட புதன்கிழமை கொரோனா பாதிப்பு 86 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.