June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கனமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

1 min read

Traffic congestion in Chennai due to heavy rains

30.12.2021

சென்னையில் திடீர் தொடர் மழையால் அண்ணா மேம்பாலம், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் மழை நீர் தேங்கி குளமாக காட்சி தருகிறது. பெரியார் நகர் ஈ.வே.ரா. சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், கடும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பஸ்,ஆட்டோ கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கெங்குரெட்டி, மேட்லி, அரங்கநாதன், ரிசர்வ்வங்கி சாலை சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கத்தீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை எம்.ஆர்.சி.நகரில் தற்போது வரை 18 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.