“கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்”- மு.க. ஸ்டாலின் பேட்டி
1 min read
“Have been walled up for the last 10 years”- Interview with Stalin
30/12/2021
“கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்” என்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. மழை காரணமாக வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது ஆனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றி சரிசெய்யப்படும். விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும் .
கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாரா இல்லை. அடுத்த பருவமழைக்குள் அனைத்து சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கு. நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.