April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000 ஆக நிர்ணயம்; தமிழக அரசு உத்தரவு

1 min read

Price of river sand per unit is fixed at Rs.1000; Government of Tamil Nadu order

8.1.2022
ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. ஆயிரமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் ஏழை மக்கள் எளிதாக www.tnsant.in என்ற இணைய தளம் வழியாக விலையை செலுத்தி எவ்வித சிரமமும் இல்லாமல் மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 – மதியம் 2 மணி வரை இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணல் பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்கப்படும்.
தற்போது 16 லாரி குவாரிகள் 21 மாட்டு வண்டி குவாரிகளை இயக்க சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.1000 நிர்ணயம்

இந்நிலையில், தமிழக அரசு இன்று பிறப்பித்த உத்தரவில், ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.