பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
1 min read
MK Stalin’s review of the Pongal package delivery process
10.1.2022
சென்னை ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது, பொங்கல் தொகுப்பு வாங்க முகக்கவசம் அணியாமல் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் அணிவித்தார்.