June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா வைரசை வேண்டுமென்ற வரவைத்த பெண் பாடகி சாவு

1 min read

Death of female singer who deliberately brought up the corona virus

20.1.2022
தடுப்பூசிக்கு எதிரான பெண் பாடகி கொரோனா வைரசை வேண்டுமென்றே தனக்கு வரவைத்தார். அவர் பரிதாபமாக இறந்தார்.

கிராமிய பாடகி

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் கிராமிய பாடகி ஹனா ஹொர்கா. 57 வயதான இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால், ஹனா ஹெர்கா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

அதேவேளை அவரது கணவர் மற்றும் மகன் ஜென் ரீக் ஆகிய இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தனது தாயிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு ரீக் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.

கொரோனா

ஆனால், ஹனா ஹொர்கா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை விட கொரோனா வருவதே மேல் என அவர் கூறியதாக ரீக் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசில் தியேட்டர் போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

இதற்கிடையில், ஹனா ஹொர்காவின் கணவருக்கும், மகன் ரீக்கிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

ஆனால், ஹனா ஹெர்க்கா தனது கணவர் மற்றும் மகனுடன் எந்த வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் முகக்கவசம் அணியாமலும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாமலும் தொடர்பில் இருந்துள்ளார்.

தனக்கு கொரோனா வந்ததும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து அதன்பின்னர் தியேட்டர் போன்ற பொதுஇடங்களுக்கு செல்லலாம் என அவர் நினைத்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதற்கு எதிரான மனநிலையில் இருந்த ஹனா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கணவரும், மகனும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் ஹனா அதை கண்டுகொள்ளவில்லை.

சாவு

இந்நிலையில், கணவர் மற்றும் மகனை தொடர்ந்து ஹனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹனா தனது சமூகவலைதள பக்கத்தில், நான் குணமடைந்துவிட்டேன். இது (கொரோனா) தீவிரமானது. ஆகையால், தற்போது தியேட்டர் செல்வது முக்கியமானது. கடல் பயணம் தற்போது மிகவும் முக்கியம்’ என பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் தனது தாயார் உயிரிழக்க கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரமே காரணம் என ஹனாவின் மகன் ரீக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனாவை வேண்டுமென்றே வரவைத்த பாடகி ஹனா உயிரிழந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.