நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அனுமதி
1 min read
Actor Vijay allows fans to contest in urban local elections
27.1.2022
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெறும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக பேசிய புஸ்ஸி ஆனந்த், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மகள் இயக்கம் சார்பில் போட்டியிட ரசிகர்களுக்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவித்தார்.