May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மீண்டும் அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டது

1 min read

The American press re-published the news regarding the Pegasus affair

29.1.2022
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மீண்டும் அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பெகாசஸ் விசவாரம்

உலக அளவில் 50,000 கைபேசிகளில் பெகாசஸ் ஸ்பைவேர் ஊடுறுவியுள்ளதாக, அம்னெஸ்டி இன்ட்டெர்னேசனல் அமைப்பும், பார்பிடன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 14 உலக நாடுகளின் தலைவர்களின் கைபேசி எண்களும் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அதிபர்கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் இந்த பட்டியலில் உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரின் கைபேசிகள், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் இந்த தலைவர்கள் யாரும், தம் கைபேசிகளை சோதனை செய்து, பெகாஸ் ஸ்பைவேர் அவற்றில் ஊடுறுவியுள்ளதாக உறுதி செய்யவில்லை. பெகாஸ் ஸ்பைவேர் மென்பொருளை, உலக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், தனி நபர்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் இதை உருவாக்கியுள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியுள்ளது.

நாடாளுமன்றம் முடங்கியது

இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமானது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் பெகாசஸ் விவகாரத்தால் முடங்கியது. கடந்தாண்டு இந்த விவகாரம் பெரிதளவில் சர்ச்சையானபோது, இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மத்திய அரசு நிராகரித்தது. அக்டோபரில் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது.

மீண்டும்..

இந்த நிலையில், திங்கள்கிழமை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் பெகாசஸ் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர் என்ற தலைப்பில் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “2017-இல் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் (அப்போதைய பிரதமர்) பென்ஜமின் நெதன்யாகுவும் கடற்கரையில் வெறும் கால்களில் நடந்தனர். இந்த உணர்வுகளுக்குக் காரணம் இருக்கிறது.

அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இதன்பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்பிஐயும் பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி கருத்து கேட்க பிடிஐ செய்தி நிறுவனம் அரசைத் தொடர்புகொண்டிருக்கிறது. ஆனால், இதுதொடர்பாக உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.