April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை

1 min read

There is no change in the personal income tax rate in the federal budget

1.2.2022

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவரரது பட்ஜெட் உரையில் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வருமானவரி

  • வரிசெலுத்துவோர் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.
  • திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்.
  • கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி 2 ஆண்டுகள் அவசாகம் வழங்கப்படும்.
  • தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது.

வரிச்சலுகை

  • ஸ்டார்ட்அப்களுக்கான வரிச்சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஸ்டார்ட்அப்களுக்கான வரிச் சலுகைகள் மார்ச் 31, 2023 வரை இணைக்கப்படும்
  • மெய்நிகர் டிஜிட்டல் சொத்தைப் பரிசாகப் பெற்றால் வாங்குபவருக்கு வரி விதிக்கப்படும்.டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும்.
  • மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் முதலாளிகள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்த முன்மொழிகிறது.
  • கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆக குறைக்கப்படும்.
  • கார்ப்பரேட் கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

ரத்து

  • வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது.
    மேற்கண்ட தகவலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.