May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பஞ்சாப் எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு விரட்டியது

1 min read

The Indian Army shot down a Pakistani drone entering the Punjab border

9.2.2022

பஞ்சாப் எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு விரட்டியடித்தது.

டிரோன்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எல்லைப்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் (சிறிய ஆளில்லா விமானம்) டிரோன்கள் மூலம் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தும் முயற்சிகளை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப்பில் குர்தாஸ்பூர் செக்டாரின் பஞ்ச்கிரைன் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து ஒரு டிரோன் பறந்து வந்தது. இதை பார்த்த இந்திய ராணுவத்தினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அதிகாலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்கு சத்தத்துடன் டிரோன் பறந்து வருவதை இந்திய ராணுவத்தினர் பார்த்தனர்.

உடனே அந்த டிரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காகர் மற்றும் சிங்கோக் கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான மஞ்சள் நிற பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பாக்கெட்டுகளை டிரோன் வீசிச்சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த பாக்கெட்டில் கைத்துப்பாக்கி ஒன்றும் சுற்றப்பட்டு இருந்தது. இது எல்லையில் இருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

டிரோன் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்டது முறியடிக்கப்பட்டது. டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது தப்பிச்சென்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.