தஞ்சை பள்ளி மாணவி மரணம் பற்றி சிபிஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்தது
1 min read
CBI probes death of Tanjore school student F.I.R. Registered
15.2.2022
மத மாற்றம் செய்ய முயன்றதால் தஞ்சாவூர் பள்ளியில் படித்த அரியலுார் மாணவி தற்கொலை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி தற்கொலை
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலுாரைச் சேர்ந்த, 17 வயது மாணவி, கடந்த மாதம் 9ம் தேதி தற்கொலை செய்தார். கிறிஸ்துவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதால், மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதியளித்தது.
இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் நேற்று (பிப். 15) சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதில், மாணவி மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.