July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி

1 min read

At least 14 people have been killed after a bus overturned in a valley in Uttarakhand

22.2.2022

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலியானார்கள்.

பேருந்து கவிழ்ந்து விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள கன்காயின் தண்டா மற்றும் கட்டௌதி கிராமத்தைச் சேர்ந்த திருமண கோஷ்டி தனக்பூர் நகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டு தண்டா கக்னாய் கிராமத்திற்கு நேற்று இரவு 10 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுகிதாங்- டண்டமினார் சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து அதிகாலை 3 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், 14 பேரின் உடல் எடுக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுனர் உள்பட இருவர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.