June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் 72வது வார்டில் கானா பாலா தோல்வி

1 min read

Gana Bala loses 72nd ward in Chennai

22.2..2022

சென்னை 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி அடைந்தார்.

கானா பாலா

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

இந்நிலையில், சென்னை 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளரை விட 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வருகிறார். 8303 வாக்குகள் பெற்று. திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்ற நிலையில் 6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாமிடம் பிடித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *